திருமூழிக்களம் & திருக்காட்கரை – திவ்யதேச அனுபவம்

அடியேன் குடியரசு தினத்தன்று திருமூழிக்களம் மற்றும் திருக்காட்கரை என்கின்ற மலை நாட்டு திவ்ய தேசங்களுக்கு சென்றிருந்தேன். இத்துடன் அடியேனுடைய மலையாள நாட்டு திவ்யதேச யாத்திரைகள் முற்று பெற்றுவிட்டன. அடியேனுடைய அனுபவங்களை பாகவதர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்கே இந்த கட்டுரை.

முதலில் சென்ற இடம் திருமூழிக்களம். கேரளவாசிகள் “மூழிக்குளம்” என்று இத்தலத்தை அழைக்கிறார்கள். அங்கமாலி ரயிலடியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலம் ராமாயண வரலாறு பாடும் நான்கு கேரள நாட்டு திருக்கோவில்களில் ஒன்று. இத்தலத்தை ஸ்ரீ லக்ஷ்மண க்ஷேத்ரம் என்றும் மக்கள் அழைப்பதுண்டு. அதாவது, இராமனை தேடி வந்த பரதன் அவரை வதம் புரிய வந்திருக்கிறான் என்று லக்ஷ்மணன் பாகவத அபசாரம் புரிந்ததற்காக ப்ராயச்சித்தம் தேடிய இடம். இங்குள்ள எம்பெருமானை வேண்டுவதன் மூலம் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பாகவத அபசாரங்கள் ஒழியும் என்பது ஐதீகம். பொருளாதார வளர்ச்சியினால் சற்றும் சீர்குலையாத ஒரு திவ்யஸ்தலம். வாழை, பலா, மா என்ற முக்கனிகளின் தோட்டங்கள் சூழ்ந்த ஒரு அமைதியான (சிறிய) நகரம்.

காலையில் நான்கு மணிக்கே இத்திருக்கோவிலுக்கு அடியேன் வந்து சேர்ந்தபடியால் சந்நிதி திறக்கும் வரை ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை. ஆனால் கேரளாவின் வழக்கத்துக்கு மாறாக தேநீர் கடைகள் நான்கு மணிக்கே திறந்துவிட்டன. கோவிலுக்கருகே பாயும் பாரதப்புழை என்ற நதியில் ஸ்நானம் செய்து என்னுடைய நித்யகர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டேன். திருப்பல்லாண்டு துவங்கி எம்பெருமானை சேவித்துக்கொண்டே திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான் மற்றும் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களை ப்ரத்யேகமாக சேவிக்க பாக்யம் கிடைத்தது. இத்தல பெருமாளை பற்றி ஆழ்வார்கள் வாய்மொழிந்த பெரிய திருமொழி மற்றும் திருவாய்மொழி பாசுரங்களையும் சேவித்தேன். இத்தல பெருமாளை திருமங்கயாழ்வார் “பின்னோர்கள் வணங்கும் சோதி” என்று பாடுகிறார். அதாவது, எம்பெருமானின் விபவ அவாதாரங்களை காணக் கிடைக்காத நம்மை “பின்னோர்கள்” என்று விசேஷித்து, நம்முடைய இக்குறையை தீர்க்கவே எம்பெருமான் இங்கு கோவில் கொண்டுள்ளார் என்பது ஆழ்வார் வாக்கு. இத்தல பெருமாளுக்கு “மார்தவம்” என்ற குணம் மேலோங்கி இருக்கிறதாம். மார்தவம் என்பது தன்னை சார்ந்தவர்கள் தன்னை விட்டு பிரிவதை சகிக்கமுடியாத ஒரு தன்மை. எனவே, இத்தலத்து பெருமாளை தரிசிக்கும் போது அவருக்கருகே நாம் சில நொடிகள் கழிப்பது போன்றொரு உணர்வு.

நெய்வேத்யம் முடிந்தக் கையேடு எம்பெருமானின் உற்சவரை கோவிலின் ப்ரஹாரத்தை சுற்றி மூன்று முறை ப்ரதக்ஷனமாய் எழுந்தருள பண்ணுதல் இக்கோவில் மரபு. அந்த சேவை முடிந்த உடனே ஒரு ஏழரை மணிப்போல் ஆலுவா (Alwaye) சென்றடைந்தேன். அங்கிருந்து 11 கி.மீ. தொலைவில் கொச்சின் அறிவியல் மற்றும் பொறியியல் பல்கழைக்கழகம் அருகில் அமைந்துள்ள அடுத்த திவ்யஸ்தலமான திருக்காட்கரையை சென்றடைந்தேன். இத்தலத்தை “த்ரிக்காக்கரா” என்னும் “வாமன க்ஷேத்ரம்” என்னும் ஊர்க்காரர்கள் அழைக்கின்றார்கள். எம்பெருமானின் வாமன அவதாரம் இத்தலத்தில் தான் அரங்கேறியது என்று புராணம். ஆகவே, மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் இங்கு மிக சிறப்புடனும் செம்மயுடனும் கொண்டாடப்படுகிறது. நகர கோட்டத்துக்கு உட்பட்டிருக்கிற ஸ்தலம் என்பதால் இங்கு ஜனநெரிசல் சற்று மேலோங்கி இருந்தது. எம்பெருமானின் திருக்கோலமும் மற்ற மலை நாட்டு திவ்ய தேசங்களுடன் ஒப்பிடுகையில் சிறியதாக இருந்ததால் அடியேன் கூட்டத்தோடு போராட அவசர சேவையே நடந்தது. பிரதக்ஷனமாய் வந்து நம்மாழ்வாரின் இத்தல பாசுரங்களை சேவித்தேன். ஒரு பத்து மணிப்போல் இரண்டுக்கோவில் தரிசனங்களும் முடிந்துவிட்டன.

பின்குறிப்பு:
இத்தலங்களுக்கு ரயிலடிகலிருந்து செல்ல ஆட்டோக்கள் கி.மீ. கு 14 ரூபாய் என்கின்ற அடிப்படையில் கிடைக்கின்றன. திருமூழிக்களத்தில் தங்கும் வசதிகளோ, குளியல்-கழிப்பறை வசதிகளோ கிடையாது. ஆறு, தோப்பு என்றவாறு திறந்தவெளி வாழ்க்கை தான். எனவே நாகரீக வாழ்க்கைக்கே பழக்கிப்போன நகரப் பயணிகள் ஆலுவா அல்லது எர்ணாகுளத்தில் தங்கி இத்தலங்களை தரிசித்தல் உத்தமம்.

Upadesa Rathinamaalai – First Pasuram – Translation/Commentary

பெரிய ஜீயர் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை

முதற் பாட்டு:
எந்தை திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால்
வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து

விளக்கம்:
எமது ஸ்வாமியான திருவாய்மொழிப்பிள்ளையின் விசேஷ கடாக்ஷத்தாலே எனக்கு கிடைத்த உபதேச வரலாற்றை சிந்தித்து, எனக்குப் பிற்பட்டவர் அப்யாஸிக்கும் படியாய், நிலைபெற்ற சிறப்புடைய வெண்பா என்னும் பாட்டில் அமைத்து உபதேசமாய் சொல்லுகின்றேன்.

**********************************************

Periya Jeeyar’s Upadesa Rathinamaalai:

First Pasuram:
enthai thiruvAimozhippillai innaruLAl
vandha upadEsa mArgaththai sindhai seidhu
pinnavarum kaRka upadEsamAi pesurindREn
manniya seer venpAvil vaiththu

Explanation:
I offer the knowledge I gained through the katAksham of my swami Thiruvaimozhippillai to the sambandhis that follow me; in the form of advices tuned in a poetical construct called ‘venpaa”, such that they can learn and put them to practice.

Upadesa Rathinamalai – Thaniyan – Translation/Commentary

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ:
ஸ்ரீமத் வர வர முநயே நமஹ:

பாகவதோத்தமர்களுக்கு என்னுடைய நேரம் கடந்த தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். இன்றிலிருந்து பெரிய ஜீயர் அருளிச் செய்த “உபதேச ரத்தினமாலை” என்கின்ற க்ரந்தத்திற்கு பிள்ளைலோகம் ஜீயர் எழுதிய வியாக்யானத்தை தழுவிய எளிய தமிழ் மற்றும் ஆங்கில வ்யாக்யானங்களை தொகுத்து வழங்க அடியேன் முற்படுகிறேன்.

இன்று இக்க்ரந்தத்திற்கு கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த தனியனுடன் தொடங்குவோம்:

முன்னந் திருவாய்மொழிப்பிள்ளை தாமுபதேசித்த
நேர் தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முநி
தன்னன்புடன் செய் உபதேச ரத்தினமாலை தன்னைத்
தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே

விளக்கம்:

பூர்வத்தில் திருவாய்மொழிப்பிள்ளை உபதேசித்தருளிய தத்துவார்த்தங்களின் ப்ரகாரங்களை எப்போதும் அனுசந்திக்கிற ஸ்ரீ மணவாள மாமுனிகள் லோக ஜீவனார்த்தமான ப்ரீதியுடனே அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை என்ற இந்நூலில் சொல்லப்பட்டுள்ள அர்த்த விஷேஷங்களை தங்கள் மனத்தில் நிலைக்க செய்யுமவர்களுடைய திருவடிகள் நமக்கு அடைக்கல ஸ்தானமாகும்.

*************************************************************

Srimathe Ramanujaya Namah:
Srimad Vara Vara Munaye Namah:

Respected Bhagavathas,

Please accept my delayed Thai thirunal wishes. From today, adiyen would attempt to provide the English translations for Periya Jeeyar’s “Upadesa Rathinamalai” in Thamizh and English. The translations will be based on the commentary written by Sri. Pillailokam Jeeyar for this grantham.

Today, we will begin with the thaniyan that Sri. Kovil Kanthadai Annan composed for this grantham:

munnan thiruvAimozhippiLLai thAm upadesitha
nEr thannin padiyaith thaNavAdha sol maNavALa muni
than anbudan sei upadEsa rathinamAlai thannaith
than nenju thannil tharippavar thALgaL saraN namakkE

Translation:

Their feet are our sole refuge, who, register in their respective hearts, the inner truths conveyed in “Upadesa Rathinamalai”, a work authored by Sri. Manavala Mamunigal by virtue of the spiritual education he received under the tutelage of his acharya Thiruvaimozhippillai, which he in turn offered to the world out of his love for people’s spiritual upliftment.